Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்னிலக்கத் தொலைக்காட்சிக்கு மாறிவிட்டீர்களா?

அந்த இரண்டு அமைப்புகளையும் சேர்ந்த சுமார் 100 ஊழியர்கள் அவ்விரு வட்டாரங்களிலும் உள்ள 1,000 ஓரறை, ஈரறை வீடுகளுக்குச் சென்றனர்.

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் நிறுவனமும், தகவல்-தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் பீச் ரோட்டிலும் தோ பாயோவிலும் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மின்னிலக்கத் தொலைக்காட்சிக்கு மாற கைகொடுத்துள்ளன.

அந்த இரண்டு அமைப்புகளையும் சேர்ந்த சுமார் 100 ஊழியர்கள் அவ்விரு வட்டாரங்களிலும் உள்ள 1,000 ஓரறை, ஈரறை வீடுகளுக்குச் சென்றனர்.

வீடுகளில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளின் நிலையைச் சோதித்துப் பார்க்கவும் மின்னிலக்க முறைக்கு மாறத் தேவையான விவரங்களை இணையத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்யவும் அவர்கள் உதவினர்.

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

அனலாக் தொலைக்காட்சியைத் தொடர்ந்து பயன்படுத்தும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கும் சிங்டெல், ஸ்டார்ஹப் ஆகியவற்றின் கட்டண ஒளிவழிகளைப் பார்க்காதோருக்கும் அந்த உதவி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அனலாக் முறை முற்றிலும் நிறுத்தப்படும்.

வரும் மாதங்களில் பல்வேறு வட்டாரங்களில் உள்ள வீடுகளுக்கும் தொண்டூழியர்கள் சென்று உதவுவர் என்று மீடியார்கார்ப் தெரிவித்தது.

மின்னிலக்கத் தொலைக்காட்சி பற்றி அறியாதோருக்கு, அதற்கு மாற உதவியது மனநிறைவான அனுபவமாய் இருந்ததாகத் தொண்டூழியர்கள் சிலர் கூறினர்.

அதன்வழி இலவசத் தொலைக்காட்சி ஒளிவழிகளை வசிப்போரால் தொடர்ந்து பார்க்க முடியும் என்பதை அவர்கள் சுட்டினர்.

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

மின்னிலக்க முறைக்கு மாறுவதன் தொடர்பிலான விவரங்கள்
https://digitaltv.sg என்ற இணையத்தில் கிடைக்கும்.

1800-388-4357 என்ற தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்