Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'குடியேறிகள் சிங்கப்பூரில் ஒன்றிணையப் போதுமான முயற்சி எடுக்கவில்லை': IPS கருத்தாய்வில் கலந்துகொண்ட 60 விழுக்காட்டினர்

சிங்கப்பூரர்கள், குடியேறிகளின் முக்கியத்துவத்தையும் அவர்களின் மதிப்பையும் உணர்கின்றனர்.

வாசிப்புநேரம் -
'குடியேறிகள் சிங்கப்பூரில் ஒன்றிணையப் போதுமான முயற்சி எடுக்கவில்லை': IPS கருத்தாய்வில் கலந்துகொண்ட 60 விழுக்காட்டினர்

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரர்கள், குடியேறிகளின் முக்கியத்துவத்தையும் அவர்களின் மதிப்பையும் உணர்கின்றனர்.

அதே வேளையில் அவர்கள் சிங்கப்பூர் சமுதாயத்தில் ஒன்றிணையக் கூடுதல் முயற்சி எடுக்கலாம் என்று பல சிங்கப்பூரர்கள் கருதுவதாகத் தெரியவந்துள்ளது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கொள்கை ஆய்வுக் கழகம் (IPS) நடத்திய கருத்தாய்வில் அந்த விவரங்கள் தெரியவந்தன.

நேற்று நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு மன்ற மாநாட்டில் விவரங்கள் வெளியிடப்பட்டன.

சுமார் 4,000 குடிமக்களிடமும் நிரந்தரவாசிகளிடமும் கருத்தாய்வு நடத்தப்பட்டது.

 ஒரே குடியிருப்புப் பேட்டையில் வெவ்வேறு நாட்டவர் வசிப்பது நல்லது - 90%

குடியேறிகள் சமுதாயத்தில் ஒன்றிணையப் போதுமான முயற்சி எடுக்கவில்லை - 60%

குடியேறிகளைவிட சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்களிடம் நன்றாகப் பழக முடிவதாகக் கருத்தாய்வில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

அதுபோன்ற சவால்கள் இருந்தாலும் சிங்கப்பூர் தொடர்ந்து புதிய குடிமக்களை வரவேற்கும் என்றார் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ.

புதிதாகக் குடியுரிமை பெறுவோருக்கான கற்றல் பயணத்தின் அம்சங்களை மறுபரிசீலனை செய்யப் புதிய பணிக்குழு அமைக்கப்படும் என்றார் திருவாட்டி ஃபூ.

அதில் உள்ளூர்வாசிகளும் புதிதாகக் குடியுரிமை பெற்றோரும் இடம்பெறுவர் என்றும் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்