Images
  • sg covid (7)
    (படம்: Try Sutrisno Foo)

6 வயதுச் சிறுமி உட்பட, இந்தியாவிலிருந்து திரும்பிய மூவருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் நேற்றுப் புதிதாக 396 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 52,205.

சமூக அளவில் மூவருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

- இந்தியாவைச் சேர்ந்த 26 வயது ஆடவர். அவர், முன்னர் நோய்த்தொற்றுக்கு ஆளானவருடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்.

- சீனாவைச் சேர்ந்த 67 வயது மாது. மேம்பட்ட சமூகப் பரிசோதனைகளில் அவருக்கு நோய் அடையாளம் காணப்பட்டது.

- இந்தியாவைச் சேர்ந்த 33 வயது ஆடவர். அத்தியாவசிய ஊழியர்களுக்கு நடத்தப்படும் சோதனைகளில் அவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

நேற்று 6 வயதுச் சிறுமி உட்பட, வெளிநாட்டிலிருந்து திரும்பிய மூவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அனைவரும் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள்.

சிங்கப்பூரரான அந்தச் சிறுமி, கடந்த மாதம் 3-ஆம் தேதி நாடு திரும்பினாள். அவளுக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதியானது.

ஒருவர், சிங்கப்பூர் நிரந்தரவாசியான 13 வயதுச் சிறுவன்.

இன்னொருவர் 29 வயதுப் பெண்.

அவர்கள் இருவரும் கடந்த மாதம் 19 ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர்.

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மூவருக்கும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

வீட்டில் தங்கும் உத்தரவின் கீழ் இருந்தபோது அவர்களுக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மருத்துவமனைகள் அல்லது சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளிலிருந்து மேலும் 183 பேர் தங்கள் வசிப்பிடம் திரும்பினர்.

46,491 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் 5,551 பேரும், பொது மருத்துவமனைகளில் 136 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். 

Top