Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டிலிருந்து திரும்புவோரால் கிருமிப் பரவல் சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கியுள்ளது

வெளிநாட்டிலிருந்து திரும்புவோரால் கிருமிப் பரவல் சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கியுள்ளது

வாசிப்புநேரம் -

உலக நாடுகளுடன், சிங்கப்பூர், பயணத் தொடர்புகளைப் படிப்படியாக மீண்டும் ஏற்படுத்தி வரும் வேளையில் வெளிநாட்டிலிருந்து திரும்புவோருக்கு இடையே கொரோனா கிருமிப் பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

கடந்த 5 வாரங்களில் வெளிநாட்டிலிருந்து இங்கு திரும்பியோருக்கு இடையே சுமார் 150 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 729 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

அவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் கடந்த ஐந்து வாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்தோரில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் முதலானோர் அடங்குவர்.

இருப்பினும், சிங்கப்பூர் அதன் பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கட்டங்கட்டமாகத் தளர்த்தி வருகிறது.

சீனாவுடனான இருதரப்புப் பயணமுறையை சிங்கப்பூர் ஜூன் மாதம் தொடங்கியது.

மலேசியாவுடனான இருதரப்புப் பயணமுறையை இம்மாதப் பிற்பாதியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்