Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூர் வந்த ஐவருக்கு நோய்த்தொற்று

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 15 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூர் வந்த ஐவருக்கு நோய்த்தொற்று

படம்: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 15 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 57,700 ஆனது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஐவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

அவர்களில் இருவர் இந்தியாவிலிருந்து திரும்பிய சிங்கப்பூர் நிரந்தரவாசிகள். அவர்கள் இம்மாதம் 15, 25 ஆகிய தேதிகளில் சிங்கப்பூருக்கு வந்தனர்.

எஞ்சிய மூவரும் இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பியவர்கள். அவர்கள் அனைவருமே வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். அந்த மூவரும் இம்மாதம் 15ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தனர்.

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய ஐவரும் இங்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்