Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செல்லப்பிராணிகளின் உரிமையாளர் விவரங்களைச் சரிபார்க்க உறுதியான வழி இல்லை

தகனம் செய்ய கொண்டு வரப்படும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர் விவரங்களைச் சரிபார்க்க எந்த ஒரு உறுதியான வழியும் இல்லை என்று தகனச் சேவையை வழங்கும் துறையைச் சார்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
செல்லப்பிராணிகளின் உரிமையாளர் விவரங்களைச் சரிபார்க்க உறுதியான வழி இல்லை

படம்: Lim Jia Qi

தகனம் செய்ய கொண்டு வரப்படும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர் விவரங்களைச் சரிபார்க்க எந்த ஒரு உறுதியான வழியும் இல்லை என்று தகனச் சேவையை வழங்கும் துறையைச் சார்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மாண்ட செல்லப்பிராணியின் உரிமையாளர்களை அடையாளம் காண, தங்களால் முடிந்த வரை, முயற்சி செய்வதாக நிறுவனங்கள் வலியுறுத்தின.

செல்லப்பிராணி விடுதிகளை நடத்துவோரும் செல்லப்பிராணிகளுக்காகத் தகனச் சேவையை வழங்குவோரும் அண்மை காலங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளன.

Platinium Dogs Club செல்லப்பிராணி விடுதியில் நடந்ததாகச் சொல்லப்படும் விலங்குத் துன்புறுத்தல் சம்பங்களின் தொடர்பில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து அங்கு விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின்போது 18 நாய், ஒரு முயல் ஆகியவை அங்கு இருப்பதை வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் கண்டறிந்தது.

அந்த விடுதியின் பாதுகாப்பிலிருந்தபோது Prince என்ற நாய் காணாமல் போனது. பின்னர் அது அங்கு மாண்டது தெரிய வந்தது.

செல்லப்பிராணிகளுக்காகத் தகனச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் உரிமம் பெற்றிருப்பது அவசியமில்லை என்று ஆணையம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்