Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலக உணவக விருதுகள் நிகழ்ச்சியில் அதிக கவனத்தை ஈர்த்த சிங்கப்பூர்

பாரிஸில் நடைபெற்ற உலக உணவக விருதுகள் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அதிக கவனத்தை ஈர்த்தது.

வாசிப்புநேரம் -
உலக உணவக விருதுகள் நிகழ்ச்சியில் அதிக கவனத்தை ஈர்த்த சிங்கப்பூர்

படம்: Channel NewsAsia

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பாரிஸில் நடைபெற்ற உலக உணவக விருதுகள் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அதிக கவனத்தை ஈர்த்தது.

திரைப்படத் துறையின் Oscar விருதுகள் போல், சமையல் உணவுத் துறையைக் கொண்டாடும் வகையில் புதிய நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய அமைப்புகளில், சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகமும் ஒன்று.

சிங்கப்பூரைப் பிரதிநிதித்து சிங்கப்பூரரும், சமையல் கலை நிபுணருமான ஜஸ்டின் குவேக் (Justin Quek) உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அவரது இரண்டு உணவகங்கள் மரினா பே சான்ட்ஸ் (Marina Bay Sands) ஹோட்டலில் அமைந்துள்ளன.

நிகழ்ச்சியில் மொத்தம் 18 விருதுகள் வழங்கப்பட்டன.

சிங்கப்பூர் இம்முறை விருது பெறத் தவறியபோதும், அடுத்த ஆண்டு அது கிடைக்குமென நம்புவதாக சமையல் கலை நிபுணர்கள் குறிப்பிட்டனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்