Images
  • inclusiveness in the community (1)

கல்வியில் அனைவரையும் உள்ளடக்கும் போக்கு மேம்பட வேண்டும்: ரஹாயு மாஹ்சஸம்

சிங்கப்பூரின் கல்விச் சூழலில், எவ்வித வேறுபாடுமின்றி அனைவரையும் உள்ளடக்கும் போக்கு ஊக்கவிக்கப்பட்டாலும் அதில் இன்னும் செய்ய வேண்டியிருப்பதாக நாடளுமன்ற உறுப்பினர் ரஹாயு மாஹ்சஸம் (Rahayu Mahzam) தெரிவித்துள்ளார்.

உடற்குறைபாடு உள்ளவர்களை மற்றவர்களைப்போல் நடத்தும் இயல்பு நமது சமுதாயத்தில் முழுமையாக இல்லை என அவர் குறிப்பிட்டார்.

திருவாட்டி ரஹாயுவின் மகனுக்கு Down Syndrome குறைபாடு உள்ளதாக அவர் அண்மையில் கூறியிருந்தார்.

நமது சமுதாயம் உடற்குறைபாடு உள்ளவர்களைப் புரிந்து நடந்துகொள்ளத் தொடங்கியிருந்தாலும், இத்தகையோரைச் சமமாகக் கருதும் மனப்போக்கை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூர் ஒரு நாடாக முன்னேற அந்த மனப்போக்கை வளர்த்துக்கொள்வது அவசியம்.

பரிவுமிக்க, கனிவான சமுதாயமாக சிங்கப்பூரை மேம்படுத்துவதில் வாய்ப்புகளை உருவாக்கித்தர அது உதவும் என்றார் திருவாட்டி ரஹாயு.
 

உங்கள் கருத்து

Top