Images
  • income tax

கடந்த நிதியாண்டில், 53.5 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது சிங்கப்பூர்

சிங்கப்பூர், கடந்த நிதியாண்டில், 53.5 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 2 விழுக்காடு அதிகம்.

கடந்த ஆண்டின் வரி வருவாய், அரசாங்கச் செலவுகளில் 72 விழுக்காடு பங்களிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது பத்தரை விழுக்காடு பங்கு வகிக்கிறது.

நிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் வரி ஆகியவற்றின் மூலம் 30 பில்லியன் டாலருக்கும் கூடுதலாகக் கிடைத்தது.

ஈட்டப்பட்ட வருவாயில் அது பாதிக்கும் அதிகம் என்று ஆணையம் குறிப்பிட்டது.

2018 ஆம் ஆண்டின் மொத்த வருமான வரியைக் காட்டிலும் அது 4 விழுக்காட்டுக்கும் அதிகம்.   

Top