Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் - இந்தியா தனிமைப்படுத்த தேவையற்ற சிறப்புப் பயண ஏற்பாடு இன்று தொடக்கம்

சிங்கப்பூர் - இந்தியா தனிமைப்படுத்த தேவையற்ற சிறப்புப் பயண ஏற்பாடு இன்று தொடக்கம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் - இந்தியா தனிமைப்படுத்த தேவையற்ற சிறப்புப் பயண ஏற்பாடு இன்று தொடக்கம்

(கோப்புப் படம்: Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும், தனிமைப்படுத்த தேவையின்றி சிறப்புப் பயண ஏற்பாடு இன்று தொடங்குகிறது.

சென்னை, டில்லி, மும்பை ஆகிய நகரங்களிலிருந்து நாள்தோறும் 6 விமானங்கள் சிங்கப்பூருக்கு இயக்கப்படுகின்றன.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கான பயணச் சேவைகளையும் விமான நிறுவனங்கள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே  அனைத்து விதமான பயணச் சேவைகளும் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில்,இந்தியா, Omicron நோய்ப்பரவல் காரணமாக, அனைத்துலகப் பயணிகளுக்கான வழிகாட்டுதல் நடைமுறையை மறுஆய்வு செய்கிறது.

நோய் பரவல் அபாயம் அதிகமுள்ள நாடுகளிலிருந்து இந்தியா செல்வோர், கட்டாயமாக 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அந்தப் பட்டியலில், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

அவற்றிலிருந்து இந்தியா செல்வோருக்குக் கட்டாயக் கிருமித்தொற்றுப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்