Images
சிங்கப்பூர்-இந்தியா இடையிலான CECA உடன்பாடு, இந்தியாவிலிருந்து இங்கு வருவோருக்கு குடிநுழைவுச் சலுகைகளை வழங்காது: அமைச்சர் சான்
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான CECA எனப்படும் முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு, இந்தியாவிலிருந்து இங்கு வருவோருக்கு நிபந்தனையற்ற குடிநுழைவுச் சலுகைகளை வழங்காது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
இருதரப்பு உடன்பாடு காரணமாக சிங்கப்பூரர்களின் வேலை வாய்ப்பு இந்தியர்களுக்கு வழங்கப்படும் என்ற பொய்த் தகவல் குறித்துப் பேசிய திரு. சான் அவ்வாறு விளக்கினார்.
சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு நிபுணர்கள் அனைவரும் மனிதவள அமைச்சின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற திரு. சான், இந்தியாவிலிருந்து வருவோருக்கும் அது பொருந்தும் என்றார்.
சிங்கப்பூர் குடியுரிமை பெற விரும்பும் அனைவரும் தற்போதுள்ள நிபந்தனைகளின்படி அதற்குத் தகுதி பெறுவது அவசியம் என்றார் அவர்.