Images
  • indian rock-1
    படங்கள்: நித்திஷ் செந்தூர் 

பூமலையில் தென்னிந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பாறைகள்

இந்தியப் பாரம்பரியத்தில் பூக்கள், பழங்கள் ஆகியவை முக்கிய அங்கம் வகிக்கின்றன. நமது கொண்டாட்டங்களிலும் சடங்குகளிலும் அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.


அதனைப் பறைசாற்றும் வகையில் எழில்மிகு ஓவியங்கள் பாறைகளில் வரையப்பட்டுள்ளன.


பூமலையில் அமைந்துள்ள Ethnobotany தோட்டத்திற்குச் சென்றால், அதனை நீங்கள் காணலாம். 



வாழையிலையில் தென்னிந்திய உணவு, குத்துவிளக்கு, அலங்கரிக்கப்பட்ட பானை, கும்பம், திருமணக் கோலத்தில் தம்பதி - இதுபோன்று பலவற்றையும் ஓவியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.


அவற்றுடன் மல்லிகை, சாமந்தி ஆகிய பூக்கள் கூடையில் குவிந்து கிடக்கும் ஓவியமும் பாறையில் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர்க் கலைஞர் இப் இயூ சோங்கின் கைவண்ணத்தில் அவை உருவாகியுள்ளன.

Top