Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தோனேசியத் தலைமைப் பாதுகாப்பு அமைச்சர் மீதான தாக்குதல் - சிங்கப்பூர் கண்டனம்

இந்தோனேசியத் தலைமைப் பாதுகாப்பு அமைச்சர் விராண்டோ மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியத் தலைமைப் பாதுகாப்பு அமைச்சர் மீதான தாக்குதல் - சிங்கப்பூர் கண்டனம்

(படம்: AFP/Sammy)


இந்தோனேசியத் தலைமைப் பாதுகாப்பு அமைச்சர் விராண்டோ மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.

திரு. விராண்டோவும், காயமடைந்த மற்றவர்களும் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு திரு. விராந்தோ உடல்நிலை தேறி வருகிறார்.

திரு. விராண்டோ பான்டென் (Banten) மாநிலத்துக்கு வாகனத்தில் சென்றபோது கத்திக்குத்துக்கு ஆளானார்.

அவருடைய வயிற்றில் ஆழமான இரண்டு காயங்கள் ஏற்பட்டன.

உள்ளூர்க் காவல்துறைத் தலைவர் உட்பட மேலும் மூவரும் அந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.

திரு. விராண்டோ உடனடியாக ஜக்கர்த்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிபர் ஜோக்கோ விடோடோ கூறினார்.

தற்போது திரு. விராண்டோவின் உடல்நிலை சீராய் இருப்பதாக மருத்துமவனை தெரிவித்துள்ளது.

கத்திக் குத்து தொடர்பில் 31 வயது ஷஹ்ரில் ஆலம் ஷா என்பவரும், 21 வயது ஃபித்ரி அன்ட்ரியானா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்