Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மில்லியன் கணக்கில் ரொக்கப் பணத்துடன் சிங்கப்பூருக்கு வந்து சென்ற இந்தோனேசிய ஆடவருக்கு அபராதம்

மில்லியன் கணக்கில் ரொக்கப் பணத்துடன் சிங்கப்பூருக்கு வந்து சென்ற இந்தோனேசிய ஆடவருக்கு அபராதம்

வாசிப்புநேரம் -
மில்லியன் கணக்கில் ரொக்கப் பணத்துடன் சிங்கப்பூருக்கு வந்து சென்ற இந்தோனேசிய ஆடவருக்கு அபராதம்

(படம்: Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூருக்கு, மில்லியன் கணக்கில் ரொக்கப் பணத்துடன் வந்து சென்ற இந்தோனேசிய ஆடவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெரும் தொகையுடன் அடிக்கடி சிங்கப்பூருக்கு வந்து சென்ற ஹெங்கி (Hengky) என்ற இந்தோனேசிய ஆடவர், தம்மிடம் உள்ள தொகை குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தை வந்தடைந்த ஹெங்கியிடம் 20,000 வெள்ளிக்கும் அதிகமாக ரொக்கம் வைத்திருந்ததாகக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒவ்வொரு முறையும் பெரும் தொகையுடன் ஹெங்கி சிங்கப்பூருக்குள் வந்து சென்றது கண்டறியப்பட்டது.

சுமார் 39 முறை, கிட்டத்தட்ட மூன்று மில்லியன் 160,000 வெள்ளி பெறுமானமுள்ள தொகையுடன் பயணம் செய்துள்ளார்.

20,000 வெள்ளி அல்லது அதற்கும் அதிகமான தொகையுடன் பயணம் செய்பவர்கள் அதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும் என்பது சிங்கப்பூர் சட்டம்.

அதை மீறி நடந்த ஹெங்கிக்கு 30,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்