Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் - இந்தோனேசியா தடுப்பூசிப் பயண ஏற்பாடு இன்று முதல் தொடக்கம்

சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே தடுப்பூசிப் பயண ஏற்பாடு இன்று தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் - இந்தோனேசியா தடுப்பூசிப் பயண ஏற்பாடு இன்று முதல் தொடக்கம்

(படம்:Jeremy Long)

சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே தடுப்பூசிப் பயண ஏற்பாடு இன்று தொடங்கியுள்ளது.

அந்தத் திட்டத்தின்கீழ் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் புறப்படுவதற்கு இரண்டு நாளுக்கு முன்பும், இங்கு வந்தவுடனும் கிருமி தொற்றவில்லை என்பதை உறுதிசெய்வது கட்டாயமாகும்.

இருநாடுகளுக்கும் இடையிலான தடுப்பூசிப் பயண ஏற்பாட்டின்கீழ் இப்போது பயணிகள் இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் வர மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து பயணிகள் இந்தோனேசியா செல்ல அனுமதி இல்லை.

இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் வர விரும்புவோர், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண அட்டைக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

அதற்கான நடைமுறை இம்மாதம் 22ஆம் தேதி தொடங்கியது.

தடுப்பூசிப் பயண ஏற்பாட்டின்கீழ் இதுவரை 2,600க்கும் அதிகமானோர் இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்