Images
  • gym
    (படம்: Pexels/William Choquette)

முன்னெச்சரிக்கையாக அடுத்த சில வாரங்களுக்கு உள்ளரங்கு உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்படும்

சிங்கப்பூரில் COVID-19 நோய்ப்பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த சில வாரங்களுக்கு உள்ளரங்கு உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்படுகின்றன.

வெளிநாட்டு, உள்நாட்டு அனுபவங்களை வைத்து அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்தது.

உடற்பயிற்சிக் கூடங்களில் எளிதாக நோய்ப்பரவல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அங்கு பொதுமக்கள் முகக்கவசம் இல்லாமல் அதிக நேரம் நெருக்கமாக நிற்கக்கூடிய சூழல் உள்ளது, அது ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் வெளிப்புறங்களில் உடற்பயிற்சி வகுப்புகளுக்கு அனுமதி உண்டு.

ஒரு வகுப்பில் 30க்கும் அதிகமானோர் இருக்கக்கூடாது. கட்டாயம் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

ஒரு குழுவில் 5 பேர் வரை இருக்கலாம், ஒவ்வொரு குழுவுக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

உள் விளையாட்டரங்கு, உடல்பிடிப்பு நிலையங்கள், அழகுப் பராமரிப்பு நிலையங்கள் போன்ற இடங்களிலும் நோய்ப்பரவல் எளிதில் ஏற்படக்கூடும் என்பதால் அந்த இடங்கள் எல்லாம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று பணிக்குழு தெரிவித்தது.  

Top