Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2020இன் வரவு செலவுத் திட்டம் வழக்கமான ஒன்றாக இருக்காது: பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளை, வருங்காலத்திற்குச் சிங்கப்பூரை ஆயத்தப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

அடுத்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம் வழக்கமான ஒன்றாக இருக்காது என்றார் அவர்.

உலகப் பொருளியல் சூழல், அமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றம் ஆகியவற்றை அது கருத்தில் எடுத்துக் கொள்ளும்.

சிங்கப்பூர் அதன் பொருளியல் அடித்தளத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று குமாரி இந்திராணி ராஜா குறிப்பிட்டார்.

அமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றம் - ஏற்றுமதி, உற்பத்தி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதும், சிங்கப்பூர் ஓரளவு நல்ல நிலையிலேயே உள்ளது என்றார் அவர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்