Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2020 வரவு, செலவுத் திட்டம் ஊழியர்களுக்கு ஆதரவு, வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்யும்: பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா

சிங்கப்பூர் வாழ்நாள் கல்வி, ஊழியர் பயிற்சி ஆகியவற்றை அணுகும் முறைகள் மாற்றம்காண்பதாய் அவர் குறிப்பிட்டார்.

வாசிப்புநேரம் -
2020 வரவு, செலவுத் திட்டம் ஊழியர்களுக்கு ஆதரவு, வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்யும்: பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா

(படம்: Reuters)

CNA938 வானொலிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா பேசினார்.

சிங்கப்பூர் வாழ்நாள் கல்வி, ஊழியர் பயிற்சி ஆகியவற்றை அணுகும் முறைகள் மாற்றம்காண்பதாய் அவர் குறிப்பிட்டார்.

முன்பு பொருளியல் மந்தநிலை ஏற்பட்டபோது முதலாளிகள் தங்கள் ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்குவதற்குப் பதில் அவர்களை பயிற்சிக்கு அனுப்பினர்.

சந்தை நிலவரம் மேம்பட்டவுடன் அந்த ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பி அதே பணியை மேற்கொண்டனர் என்பதை அமைச்சர் இந்திராணி சுட்டினார்.

ஆனால் இப்போது வேலைகள் அவற்றின் தன்மையில் விரைந்து மாற்றம் காண்கின்றன.

அதனால் முதலாளிகள், ஊழியர்கள் என இரு தரப்பினரும் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது என்றார் அவர்.

அடுத்த ஆண்டின் வரவு, செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஊழியர்களுக்குச் சிறப்பான ஆதரவு கிட்டுவதையும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதையும் உறுதிசெய்யும் என்று குமாரி இந்திராணி கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்