Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீரேற்றக் கிணற்றிலும் மீட்புப் பணியின்போதும் கோக் இயூவேன் சினுக்குக் காயங்கள் ஏற்பட்டன - ஆரம்பக்கட்ட விசாரணை

அண்மையில் மாண்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தேசிய சேவையாளரின் உடலில் தென்பட்ட காயங்கள், அவரை மீட்கும் நடவடிக்கையின்போது ஏற்பட்டவை எனக் காவல் துறை கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
நீரேற்றக் கிணற்றிலும் மீட்புப் பணியின்போதும் கோக் இயூவேன் சினுக்குக் காயங்கள் ஏற்பட்டன - ஆரம்பக்கட்ட விசாரணை

(படம்: Nevin Jacob Thomas)

அண்மையில் மாண்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தேசிய சேவையாளரின் உடலில் தென்பட்ட காயங்கள், அவரை மீட்கும் நடவடிக்கையின்போது ஏற்பட்டவை எனக் காவல் துறை கூறியிருக்கிறது.

தீயணைப்பு நிலையம் ஒன்றின், 12 மீட்டர் ஆழ நீரேற்றக் கிணற்றின் அடியில், Corporal கோக் இயூவேன் சின், சுயநினைவற்ற நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தேசிய சேவையை நிறைவு செய்யும் கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தபோது அந்த அசம்பாவிதம் ஏற்பட்டது.

மாண்ட Corporal கோக்கின் முகத்தில் வெட்டுக் காயங்கள் இருந்ததாக அவரது உறவினர் ஒருவர் ஊடகங்களிடம் கூறியிருந்ததாகத் தகவல் வெளிவந்தது.

Corporal கோக்கின் தந்தையும் மகனின் முகத்தில் ஏற்பட்ட காயங்கள் பற்றியும், இரு பற்கள் விழுந்தது பற்றியும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சம்பவம் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் காவல் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்