Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் மின்னியல், உற்பத்தித் துறைகளின் போட்டித்தன்மையை வலுப்படுத்தப் புத்தாக்கம் அவசியம்: அமைச்சர் சான்

சிங்கப்பூரின் மின்னியல், உற்பத்தித் துறைகளின் போட்டித்தன்மையை வலுப்படுத்தப் புத்தாக்கம் ஒரு முக்கிய வழி என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் மின்னியல், உற்பத்தித் துறைகளின் போட்டித்தன்மையை வலுப்படுத்தப் புத்தாக்கம் ஒரு முக்கிய வழி என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

அதனால் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் புதிய நிறுவனங்களும் தங்கள் யோசனைகளைச் சந்தையில் செயல்படுத்த ஒரு புதிய புத்தாக்க நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க முதற்கட்டமாக 5 மில்லியன் வெள்ளி செலவிடப்படும்.

சாங்கி வர்த்தகப் பேட்டையில் அமைக்கப்பட்டிருக்கும் PlanetSpark புத்தாக்க நிலையத்தின் திறப்புவிழாவில் திரு. சான் பேசினார்.

நிலையத்தின் பொறியியல் திறன்களையும் தொழில்நுட்பத் தளங்களையும் மேம்படுத்த நிதி பயன்படுத்தப்படும்.

அதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 30-க்கு மேற்பட்ட புதிய உள்ளூர் நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்துக்கும் Excelpoint மின்னியல் பொருள் விநியோக நிறுவனத்துக்கும் இடையிலான பங்காளித்துவத்தின் ஓர் அங்கம் இது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் இணையவெளியிலும் வன்பொருள் தயாரிப்பைத் துரிதப்படுத்த Excelpoint எண்ணுகிறது.

சீனா, இந்தியா, வியட்நாம் ஆகிய வட்டாரச் சந்தைகளில் அவற்றை விநியோகிக்க நிறுவனங்களுக்கு உதவ முடியும் என்றும் அது நம்புகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்