Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் 2019 - தமிழ்த்தொண்டை வித்தியாசமான முறையில் முன்னெடுத்துச் சென்ற குழுவுக்குப் புத்தாக்க விருது

தமிழ்ச்சுடர் 2019இல் முதன்முறையாக வழங்கப்படும் புத்தாக்கப் பிரிவுக்கான விருதை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் வென்றது.

வாசிப்புநேரம் -

தமிழ்ச்சுடர் 2019இல் முதன்முறையாக வழங்கப்படும் புத்தாக்கப் பிரிவுக்கான விருதை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் வென்றது.

அன்றாட வாழ்க்கையில் புத்தாக்கமிக்க வழிகளில் தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரிக்க அவர்கள் செய்த முயற்சிகளுக்கு விருது வழங்கப்பட்டது .

பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய மன்றத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்த மாணவர்கள், முன்னாள் மாணவர் சங்கத்தைத் தொடங்கி அவற்றைத் தொடர்ந்தனர்.

புத்தாக்கமிக்க வகையில் சிங்கப்பூரிலும், வெளிநாடுகளிலும் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தொண்டாற்றினர்.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவு ஈராண்டுக்கு ஒரு முறை தமிழ்ச்சுடர் விருதுகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறது. 

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, நிகழ்ச்சியின்  இணை ஏற்பாட்டாளர்.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறுகிறது.

சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்