Images
  • ITE
    படம்: ITE

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் 3 புதிய உயர் Nitec பாடத்திட்டங்கள் அறிமுகம்

சிங்கப்பூரில் வளர்ந்து வரும் புதிய துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப, தொழில்நுட்பக் கல்விக் கழகம், 3 புதிய உயர் Nitec பாடத்திட்டங்களை அறிமுகம் செய்யவிருக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் அவை நடப்புக்கு வரும். சமையற்கலை, வரைகலை, காட்சி நுணுக்கங்கள் ஆகியவை அந்த 3 பாடத்திட்டங்கள்.

அந்த முழுநேர வகுப்புகளுக்கு மாணவர்கள் எதிர்வரும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வியமைச்சின் கூட்டு மாணவர் சேர்க்கை இணையப் பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.


Top