Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூர் வரும் பயணிகள் சிலர் சிகிச்சை மேற்கொள்வதற்கு இனி பயணக் காப்புறுதியைப் பெற்றிருக்கவேண்டும்

வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் பயணிகள் சிலர், கிருமித்தொற்று தொடர்பான சிகிச்சையை மேற்கொள்வதற்கு இனி பயணக் காப்புறுதியைப் பெற்றிருக்கவேண்டும்.

வாசிப்புநேரம் -
COVID-19: சிங்கப்பூர் வரும் பயணிகள் சிலர் சிகிச்சை மேற்கொள்வதற்கு இனி பயணக் காப்புறுதியைப் பெற்றிருக்கவேண்டும்

(படம்: Calvin Oh)

வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் பயணிகள் சிலர், கிருமித்தொற்று தொடர்பான சிகிச்சையை மேற்கொள்வதற்கு இனி பயணக் காப்புறுதியைப் பெற்றிருக்கவேண்டும்.

Reciprocal Green Lane (RGL)எனும் இருதரப்புத் தடையற்ற பயணமுறை, Air Travel Pass (ATP) எனும் விமானப் பயண அனுமதி அட்டை ஆகிய திட்டங்களின்கீழ்
பயணம் மேற்கொள்வோருக்கு அது பொருந்தும்.

புதிய நடைமுறை பிப்ரவரி முதல் தேதி நடப்புக்கு வரும்.

பயணிகள், கிருமித்தொற்று தொடர்பான சிகிச்சை, மருத்துவமனைக் கட்டணங்கள் ஆகியவற்றுக்குக் குறைந்தது 30,000 வெள்ளி காப்புறுதி வழங்கும் திட்டங்களைப் பெற்றிருக்கவேண்டும்.

தற்போது, இருதரப்புத் தடையற்ற பயணமுறை, விமானப் பயண அனுமதி அட்டை ஆகிய திட்டங்களின்கீழ் சிங்கப்பூர் வரும் குறுகிய-கால விருந்தினர், சிகிச்சைக்கான முழுச் செலவை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்