Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செல்லப்பிராணிகளுக்கான காப்பீட்டுத் திட்டம் - CIMB வங்கியில் அறிமுகம்

CIMB வங்கி, நாய்களுக்கும் பூனைகளுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.  

வாசிப்புநேரம் -

CIMB வங்கி, நாய்களுக்கும் பூனைகளுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

செல்லப்பிராணிகளின் மருத்துவ செலவுகளும், அடக்கம் செய்யும் செலவுகளும் காப்பீட்டுக்குள் அடங்கும்.

அடிப்படைக் காப்பீட்டு திட்டம் ஓர் ஆண்டுக்கு $74.90-க்கு கிடைக்கிறது.

தற்செயலான மரணம், விபத்து நேர்ந்ததால் ஏற்படும் செலவுகள் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

காப்பீட்டுத் திட்டத்திற்கு தகுதி பெறுவதற்கு செல்லப்பிராணிகள் உரிய ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

12 வாரங்களிலிருந்து 7 ஆண்டு வரையுள்ள செல்லப் பிராணிகளுக்குக் காப்பீடு எடுக்கலாம்.

இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் நாய்கள், வழிகாட்டி நாய்கள் போன்றவை காப்பீட்டுத் திட்டத்திற்கு தகுதிபெற மாட்டா. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்