Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிலத்திலும் வானிலும் செயல்படக்கூடிய வாகனத் தொழில்நுட்பம் எதிர்காலத்தை மாற்றியமைக்கக் கூடும்

சிங்கப்பூரில் நடைபெறும் அறிவார்ந்த போக்குவரத்து முறை உலக மாநாட்டில் தானியக்கத் தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகனங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நடைபெறும் அறிவார்ந்த போக்குவரத்து முறை உலக மாநாட்டில் தானியக்கத் தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகனங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

நிலத்திலும் வானிலும் செயல்படக்கூடிய வாகனத் தொழில்நுட்பம் போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்று நம்பப்படுகிறது.

நான்கு நாள் மாநாட்டில் தானியக்கத் தொழில்நுட்பத்தால் இயங்கும் வாகனங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்தும் பல அம்சங்கள் இடம்பெறுகின்றன.

வாகனங்களைத் தவிர்த்து 300 மின்னிலக்க நிறுவனங்கள், போக்குவரத்து முறையை எளிமையாக்கும் தங்கள் செயலிகளைக் காட்சிக்கு வைத்துள்ளன.

அவற்றுள் ஒன்று ஓட்டுநரில்லா வாகனங்களுக்கான மென்பொருள்.

Moovita எனப்படும் சிங்கப்பூர் நிறுவனம் அதனை உருவாக்கியுள்ளது.

அந்த மென்பொருளை பல்வேறு வாகனங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்றவகையில் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

அதற்கான சோதனை முயற்சிகள் அடுத்த ஆண்டு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தொடங்கவுள்ளன.

நாளை மறுநாளும், வெள்ளிக்கிழமையும் சன்டெக் மாநாட்டு நிலையத்தில் பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்