Images

அனைத்து சமூகத்தினரும் கலந்துகொண்ட தீபாவளித் தேநீர் விருந்து

தீபாவளிக் குதூகலத்தை இந்தியர்களுடன் மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தினருடனும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை வாரியமும் இணைந்து தேநீர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

10 சமயங்களைச் சேர்ந்த தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பி.ஜி.பி மண்டபத்தில் இன்று (நவம்பர் 8) மாலை நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த பல்வேறு சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த பிள்ளைகளை அவர் அங்கு சந்தித்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை மகிழ்விக்க ஆடல், பாடல் அங்கங்களும் இடம்பெற்றன.
 

Top