Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணத்தில் கையாடல் - புதுப்பிப்பு நிறுவனத்தின் வடிவமைப்பாளருக்குச் சிறை

புதுப்பிப்புத் திட்டங்களுக்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணத்தில் 134,000 வெள்ளியைக் கையாடல் செய்த வடிவமைப்பாளருக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணத்தில் கையாடல் - புதுப்பிப்பு நிறுவனத்தின் வடிவமைப்பாளருக்குச் சிறை

(கோப்புப் படம்: Jeremy Long)

புதுப்பிப்புத் திட்டங்களுக்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணத்தில் 134,000 வெள்ளியைக் கையாடல் செய்த வடிவமைப்பாளருக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

40 வயது யூஜின் சியா சியென், நம்பிக்கை மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டது.

Liquid Construction நிறுவனத்தின் இயக்குநருமான அவர், அங்கிருந்து 20,000 வெள்ளியைக் கையாடல் செய்தார்.

புதுப்பிப்புத் திட்டங்கள் குறித்து வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளுதல், கட்டணம் வசூலித்தல் ஆகிய பொறுப்புகளை Interior Diary நிறுவனத்தில் கவனித்து வந்தார் சியா.

அந்நிறுவனத்தின் 3 பங்குதாரர்களில், அவரும் ஒருவர்.

2017இல், திட்டங்களுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் கொஞ்சத்தைக் கணக்காய்வாளரிடம் கொடுத்துவிட்டு, எஞ்சியதைச் சொந்த செலவுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்.

அவ்வாறு, அவர் கையாடல் செய்த மொத்தத் தொகை 134,381.60 வெள்ளி.

சந்தேகம் எழுந்ததால், Interior Diary நிறுவன இயக்குநர், சென்ற ஆண்டு காவல்துறையிடம் புகார் அளித்தார்.

சியா, அடுத்த மாதம் 14ஆம் தேதியிலிருந்து, தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார்.

நம்பிக்கை மோசடி செய்த குற்றத்திற்கு, அவருக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்