Images
  • asm
    (படம்: Pixabay)

சிங்கப்பூரில் வித்தியாசமான கட்டடக்கலை உள்ள இடங்கள்

கம்போங் அட்மிரல்ட்டியைத் தவிர வித்தியாசமான கட்டடக்கலைக்குப் பெயர்போன பல இடங்கள், சிங்கப்பூரில் அமைந்துள்ளன.

1) ArtScience அரும்பொருளகம்
மரினா பே சாண்ட்ஸின் ஓர் அங்கமாக இந்த அரும்பொருளகம் திகழ்கிறது. சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள கட்டடங்களுக்கு இடையே சின்னமாகத் திகழ்கிறது இந்தக் கட்டடம்.

2) Parkroyal on Pickering ஹோட்டல்

நவீன வடிவமைப்பு, தோட்டக்கலை ஆகிய இரண்டையும் Parkroyal on Pickering ஹோட்டல் இணைத்துள்ளது. சைனா டவுனில் அமைந்துள்ள இந்தக் கட்டடத்தில் ஆங்காங்கே உள்ள பச்சை பசேலென்ற தோட்டங்கள், கண்களுக்கு விருந்தாய் அமைகின்றன.

3) The Interlace கூட்டுரிமை வீடுகள்

2015ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கட்டடக்கலை விருதை இது தட்டிச்சென்றது. பெட்டிகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைப்பது போன்ற ஒரு காட்சியைச் சித்திரிக்கிறது இந்தக் கட்டடம். அறுங்கோண வடிவில் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டதுபோன்ற தோற்றமுடையது.

4) Reflections at Keppel Bay கூட்டுரிமை வீடுகள்

வழக்கமாக நேரான வடிவங்களில் உள்ள கட்டடங்களுக்குப் பதிலாக இந்த ஆறு கட்டடங்களும், வளைந்து காணப்படுகின்றன. வெவ்வேறு உயரங்களில் உள்ள இந்தக் கட்டடங்களின் வடிவமைப்பு, அதன் குடியிருப்பாளர்களைக் கவர்ந்திழுத்துள்ளது.

View this post on Instagram

Beautiful skyscraper 🌁

A post shared by @ jazwander on


5) The Hive கட்டடம்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளது. விநோதமான வளைவுகளுடன் உள்ள இந்தக் கட்டடத்தின் வடிவமைப்பில் புத்தாக்கம் புகுத்தப்பட்டுள்ளது.

View this post on Instagram

🐝 #ThomasHeatherwick

A post shared by Justin Jiang (@jawstinj) on


Top