Images
  • tan see leng

"பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய ஊழியர்கள் சிங்கப்பூருக்கு மாறிவந்த விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கவில்லை"

பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய ஊழியர்கள், சிங்கப்பூருக்கு மாறி வந்த விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கவில்லை என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து சிங்கப்பூருக்கு மாறி வந்த ஊழியர்களின் எண்ணிக்கை

2016- 2,100

2020- 4,200

பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து சிங்கப்பூருக்கு மாறி வந்த இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை

2016- 300

2019- 600

2020 - 500

வெளிநாட்டுத் திறனாளர் கொள்கை பற்றி சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி முன்வைத்த கருத்து குறித்த விவாதத்தின்போது அமைச்சர் டான் அவ்வாறு கூறினார்.

இந்தியாவுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள தடையற்ற வர்த்தக உடன்படிக்கை போன்ற ஒப்பந்தங்கள் மூலம், உள்ளூர்வாசிகளுக்கான வேலைகள் வெளிநாட்டினருக்குச் சென்றிருப்பதாக அந்தக் கட்சி கூறியிருந்தது.

அதனை மறுக்கும் வகையில் அமைச்சர் டான் கூடுதல் விவரங்களை வெளியிட்டார்.

வெளிநாட்டு நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதும், அதே பிரிவில், உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கை அதைவிட மேலும் அதிகரித்ததாக அவர் சொன்னார்.

அந்தப் பிரிவில், உள்ளூர்வாசிகளின் வேலையின்மை விகிதமும் குறைவாக இருந்ததை அமைச்சர் டான் சுட்டினார். 

Top