Images
  • collage picture
    படம்: CNA 

வேட்பு மனுக்களைச் சமர்ப்பித்திருக்கும் உத்தேச வேட்பாளர்கள்

இன்று சிங்கப்பூர்ப் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தினம்.

காலை 10 மணியிலிருந்து உத்தேச வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் நிலையங்களுக்குச் செல்லத் தொடங்கினர்.

முற்பகல் 11 மணியிலிருந்து 12 மணிவரை உத்தேச வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் வேட்புமனுக்களுக்குப் பிற்பகல் 12.30 மணிவரை, ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம்.

12.30 மணிக்குப் பிறகு, எந்தத் தொகுதியில் எந்த வேட்பாளர் களமிறங்குகிறார் என்பது தெரியவரும்.

மொத்தம் 17 குழுத்தொகுதிகளுக்கும் 14 தனித்தொகுதிகளுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை 5 புதிய தொகுதிகள். அவற்றுள் ஒன்று செங்காங் குழுத் தொகுதி. எஞ்சிய நான்கும் தனித் தொகுதிகள்.

மக்கள் செயல் கட்சிக்கு எதிராக சுமார் 10 கட்சிகள் களமிறங்கியுள்ளன.

போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதியானதும், பிரசாரம் தொடங்குகிறது.

கிருமிப்பரவல் சூழல் காரணமாக, பொது இடங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படமாட்டா.

இணையம் வழியாகவும், தேசிய ஒளிபரப்பின் மூலமும் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவர்.

அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் சுமார் 2.65 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.      

Top