Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மறைந்த இனுக்காவைப் பற்றிய சில குறிப்புகள்

சிறிது காலமாக இனுக்கா பனிக்கரடியின் உடல்நலம் குறைந்துவந்ததால் இன்று காலையில் அது கருணைக் கொலை செய்யப்பட்டது.

வாசிப்புநேரம் -
மறைந்த இனுக்காவைப் பற்றிய சில குறிப்புகள்

(படம்: Gaya Chandramohan)

சிறிது காலமாக இனுக்கா பனிக்கரடியின் உடல்நலம் குறைந்துவந்ததால் இன்று காலையில் அது கருணைக் கொலை செய்யப்பட்டது.

மறைந்த இனுக்காவைப் பற்றிய சில குறிப்புகள்:

1)வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த முதல் பனிக்கரடி இனுக்கா.

ஜெர்மானியப் பனிக்கரடியான தாயார் ஷிபா, கனடாவைச் சேர்ந்த தந்தை நனூக் ஆகியவற்றின் செல்லக்குட்டிதான் இனுக்கா. டிசம்பர் 26, 1990இல் சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் பிறந்த போது அதன் எடை வெறும் 350 கிராம். ஆனால் அது பின்னர் 500 கிலோ எடை வரை வளர்ந்தது.

2)இனுக்கா என்பது இனுயிட் மொழிப் பெயர்.

பெயர் சூட்டும் போட்டியில் பொதுமக்கள் பரிந்துரைத்த பெயர்களிலிருந்து இனுக்கா என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இனுயிட் மொழியில் அதற்கு ‘அமைதியாகப் பின் தொடர்பவர்’ என்று பொருள்.

3) குறும்புத்தனமான செயல்களை இனுக்கா செய்துள்ளது

மருந்தைத் துப்புவது, தன் பல் தூரிகையை விலங்குக் காப்பாளர்களிடமிருந்து ஒளித்து வைப்பது போன்ற குறும்புத்தனமான செயல்களை இனுக்கா செய்துள்ளது. இனுக்கா கண்ணாமூச்சி விளையாட்டை விரும்பி விளையாடியது.

4) இனுக்கவிற்குப் பிடித்தமான உணவு 'சால்மன்' மீன் வகை.

தினசரி இறைச்சி, மீன், காய்கறி, பழங்கள் போன்றவை இனுக்காவிற்குப் பரிமாறப்பட்டாலும் அது 'சால்மன்' வகை மீனை அதிகம் விரும்பி உண்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்