Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இனுக்கா இன்று அதன் இருப்பிடத்தில் காணப்படவில்லை

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்துக்கு, பனிக்கரடி இனுக்காவைக் காண இன்று சென்றவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்துக்கு, பனிக்கரடி இனுக்காவைக் காண இன்று சென்றவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பார்வையாளர்கள் வழக்கமாக இனுக்காவைக் காணும் இடத்தில் அது இல்லை.
இனுக்காவிற்கு நாளை முக்கியமான மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவதால் இன்று முழுவதும் அது அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது.

அந்தப் பரிசோதனையின் முடிவைப் பொறுத்து, இனூக்கா கருணைக் கொலை செய்யப்படலாம்.

அதன் உடல்நலம் நலிவடைந்துவருவது அதற்குக் காரணம்.

வெப்பமண்டலப் பகுதியில் பிறந்த ஒரே பனிக்கரடியான இனூக்கா, கருணைக் கொலை செய்யப்படுவது குறித்துப் பார்வையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

பொதுவாக மனிதப் பராமரிப்பில் இருக்கும் பனிக்கரடிகளின் வயது 25. இனூக்காவின் தற்போதைய வயது 27. மனித வாழ்நாளில் அது 70 ஆண்டுக்குச் சமம்.

இனூக்கா, மூட்டு வலி, பல் தொடர்பான பிரச்சினைகள், எப்போதாவது காதில் ஏற்படும் கிருமித்தொற்று ஆகியவற்றால் சிரமப்படுகிறது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்