Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் கடைசிப் பனிக்கரடியான இனுக்கா கருணைக் கொலை

சிங்கப்பூர் விலங்குத் தோட்டம், இனுக்கா பனிக்கரடி இன்று காலை கருணைக் கொலை செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் கடைசிப் பனிக்கரடியான இனுக்கா கருணைக் கொலை

படம்: Gaya Chandramohan

சிங்கப்பூர் விலங்குத் தோட்டம், இனுக்கா பனிக்கரடி இன்று காலை கருணைக் கொலை செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

காலை 7 மணிக்கு மயக்க மருந்தின் உதவியுடன் அதற்கு விடைகொடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் தெரிவித்தது.

சிறிது காலமாக இனூக்காவின் உடல்நலம் குறைந்துவந்தது. மூட்டுவலி, பல் தொடர்பான பிரச்சினைகள், எப்போதாவது காதில் ஏற்படும் கிருமித்தொற்று ஆகியவற்றால் அது சிரமப்பட்டது.

3 வாரச் சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் முன்னேற்றம் ஏதும் தென்படாததால் கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இனுக்காவின் பாதங்களிலும், வயிற்றுப் பகுதியிலும் காணப்பட்ட ஆழமான காயங்கள் ஆறவில்லை.

அவற்றால் இனுக்காவிற்கு வலியும், வேதனையும் நீடித்திருக்கும். சிகிச்சையால் அதன் வேதனை அதிகரிக்க மட்டுமே செய்திருக்கும்.

1990ஆம் ஆண்டு சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் பிறந்த இனுக்கா, வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த முதல் பனிக்கரடி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்