Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

யீஷூனில் காவல்துறை அதிகாரியிடம் தகாத முறையில் பேசியதாக நம்பப்படும் ஆடவர் மீது விசாரணை

காவல்துறை அதிகாரியிடம் தகாத முறையில் பேசியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -

காவல்துறை அதிகாரியிடம் தகாத முறையில் பேசியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்ற மாதம் 27ஆம் தேதியன்று யீஷூன் ஸ்ட்ரீட் 11இல் சிலரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டனர்.

அப்போது, அங்கே இருந்தவர்களின் அருகிலுள்ள மேசையில் மதுபானக் குவளைகள் இருந்ததை அதிகாரிகள் கவனித்தனர்.

அந்தக் குழுவைச் சேர்ந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த 39 வயது ஆடவர் திடீரெனப் புறப்பட்டுச்செல்ல முயன்றார்.

அதிகாரிகள், அவரை அங்கேயே இருக்கும்படிக் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதைக் கேளாமல் அவர் அதிகாரிகளை ஏசத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

குழுவிலிருந்த இன்னொருவர், அந்த ஆடவரைச் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது, அந்த 39 வயது ஆடவர், அவரைக் குத்தியதாகக் கூறப்படுகிறது.

தகாத முறையில் நடந்துகொண்டு பொதுச்சேவை ஊழியரை ஏசியது, குடிபோதையில் பிறருக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நடந்துகொண்டது-ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

அவருடன் சேர்த்து, அந்தக் குழுவில் இருக்கும் மற்றவர்கள் மீதும், பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை மீறிய சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்