Images
  • safe distance ambassador
    (படம்: Facebook/Masagos Zulkifli)

பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரியைத் துன்புறுத்தியதாக நம்பப்படும் இருவரிடம் காவல்துறை விசாரணை

பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரி ஒருவரைத் துன்புறுத்தியதாக நம்பப்படும் இருவரிடம், காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

சென்ற மாதம் 26ஆம் தேதியன்று, கிரவ்ஃபோர்ட் லேனில் (Crawford Lane) வேலை செய்துகொண்டிருந்த அதிகாரியை, 54 வயது ஆடவர் ஒருவர் தொந்தரவு செய்ததாகக் காவல்துறையிடம் புகார் கூறப்பட்டது.

அதிகாரியின் எதிரே சென்ற அந்த ஆடவர், தமது முகக்கவசத்தைக் கீழிறக்கி, முடிந்தால் தம்மைப் பிடிக்கும்படிக் கேலி செய்ததாக நம்பப்படுகிறது.

அதன் பின், 25 வயதுப் பெண் ஒருவர், அதே அதிகாரியிடம் சென்று அவரது தோளைத் தள்ளிவிட்டு, காலில் மிதித்ததாகக் கூறப்பட்டது.

அதிகாரியைத் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் அந்த இருவரும் பின்னர், அந்த இடத்தைவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

விசாரணைமூலம், அந்த இருவரின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

Top