Images
  • investment security industry (1)

சிங்கப்பூரின் பாதுகாவல் துறை மனிதவளத்தை மேம்படுத்த 10 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும்

சிங்கப்பூரின் பாதுகாவல் துறை மனிதவளத்தை அதிகம் சார்ந்திராமல், மேம்பட்ட தொழில்நுட்பத் திறனுடன் விளங்குவதற்கு உதவும் வகையில், சுமார் 10 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும்.

அடுத்த மூவாண்டில் அது நடைமுறைப்படுத்தப்படும்.

இன்று வெளியிடப்பட்ட அந்தத் துறைக்கான உருமாற்றுத் திட்டம் அதற்கு வகைசெய்யும்.

உள்துறை அமைச்சு உருவாக்கிய அந்தத் திட்டத்தை, உள்துறைக்கான இரண்டாம் அமைச்சர் ஜொசபின் தியோ (Josephine Teo) வெளியிட்டார்.

துறை சார்ந்த சங்கங்கள், பாதுகாவல் முகவர் நிறுவனங்கள், தொழிலாளர் இயக்கம், பாதுகாவல் சேவைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், பல்வேறு அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து அமைச்சு அதனை உருவாக்கியது.

பாதுகாவல் துறையை மறுசீரமைக்கும் திட்டங்களை அது வகுக்கும்.

சிங்கப்பூரின் பல்வேறு கட்டடங்களைப் பாதுகாப்பதில் உள்துறை அமைச்சுக்கு உறுதுணையாக பாதுகாவல் துறை செயல்படுகிறது.

அது தற்போது சுமார் 47ஆயிரம் பாதுகாவல் அதிகாரிகளையும், 600 சேவை வழங்கும் அமைப்புகளையும், 240 பாதுகாவல் முகவர் நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய திருமதி தியோ, உருமாற்றுத் திட்டத்தின் ஓர் அங்கமாக, உள்துறை அமைச்சு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்று குறிப்பிட்டார்.



Top