Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயிற்சி பெற்றுள்ள தேசிய சேவையாளர்களுக்கான தனிநபர் உடலுறுதிச் சோதனைகள் ரத்து

பயிற்சி பெற்றுள்ள தேசிய சேவையாளர்களுக்கான தனிநபர் உடலுறுதிச் சோதனைகளைத் தற்காலிகமாக ரத்துசெய்யவுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பயிற்சி பெற்றுள்ள தேசிய சேவையாளர்களுக்கான தனிநபர் உடலுறுதிச் சோதனைகள் ரத்து

(படம்: TODAY)

பயிற்சி பெற்றுள்ள தேசிய சேவையாளர்களுக்கான தனிநபர் உடலுறுதிச் சோதனைகளைத் தற்காலிகமாக ரத்துசெய்யவுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

COVID-19 கிருமித்தொற்றால் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, இம்மாத இறுதி வரை நீடிக்கும்.

இருப்பினும், ராணுவ முகாம்களில் பயிற்சி பெற்றுவரும் தேசிய சேவையாளர்களுக்கு உடலுறுதிச் சோதனைகள், தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சு, அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டது.

சிங்கப்பூர் ராணுவப் படையின் உடலுறுதி மேம்பாட்டு நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படும்.

அத்துடன், SAFRA உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் நடக்கும் நிவாரணப் பயிற்சிகளையும் உடலுறுதிச் சோதனைகளுக்கான பயிற்சி வகுப்புகளையும் தற்காலிகமாக ரத்துசெய்யவிருப்பதாய் அமைச்சு தெரிவித்தது.

கிருமி பரவிவரும் வேளையில், தேசிய சேவையாளர்கள் பலர், இந்த இடங்களில் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேசிய சேவையாளர்களின் நலனைப் பாதுகாக்க, நிலவரத்திற்கு ஏற்றவாறு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்