Images
  • job for elders
    (கோப்புப் படம்: TODAY)

முதிய ஊழியர்களுக்குப் பயிற்சியளித்து வேலை வாய்ப்புகளை வழங்கவேண்டும்: மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்

முதிய ஊழியர்களிடம் தேவையான திறன்கள் இல்லாவிட்டாலும் அவர்களுக்குப் பயிற்சியளித்து வேலை வாய்ப்புகளை வழங்குமாறு, மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொழிலாளர் சந்தையில் திறன்கள் பொருந்தாமல் இருப்பது எப்போதுமே ஒரு பிரச்சினையாக உள்ளதால் மூத்த ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும்படி அவர் கூறினார்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய இணையக் கருத்தரங்கிற்கு இடையே திரு. தர்மன் அவ்வாறு கூறினார்.

மூத்த ஊழியர்களின் திறன்கள், நிறுவனங்களுக்குப் பொருந்தாமல் இருப்பது அவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.

ஆனால், ஏற்கனவே ஓரளவுக்குத் திறன்களைக் கொண்டிருப்போருக்கு வேலை வழங்கி, பயிற்சியும் மறுபயிற்சியும் அளிக்க, முதலாளிகள் முன்வரவேண்டும் என்று திரு. தர்மன் கூறினார்.

அவ்வாறு செய்யும் முதலாளிகள், மூத்த ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள ஊழியர் சந்தைக்கும் உதவுவதாக அவர் சொன்னார்.

Top