Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஆக முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்களாகச் சிங்கப்பூரர்கள் எவற்றைக் கருதுகின்றனர்?

சிங்கப்பூரின் மரபுடைமையைப் பறைசாற்றும் அடையாளங்களாய்ச் சாங்கி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரமும் மெர்லயனும் குறிப்பிடப்பட்டிருப்பது கொள்கை ஆய்வுக் கழகத்தின் கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஆக முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்களாகச் சிங்கப்பூரர்கள் எவற்றைக் கருதுகின்றனர்?

படம்: CNA, AFP

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரின் மரபுடைமையைப் பறைசாற்றும் அடையாளங்களாய்ச் சாங்கி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரமும் மெர்லயனும் குறிப்பிடப்பட்டிருப்பது கொள்கை ஆய்வுக் கழகத்தின் கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரின் மரபுடைமைத் தலங்கள், அடையாளச் சின்னங்கள் குறித்த சிங்கப்பூரர்களின் கருத்துகளை அறிந்துகொள்ளக் கருத்தாய்வை மேற்கொண்டது கழகம்.

அதில் பங்குபெற்ற அனைவரும் அவ்விரு இடங்களையும் ஆக முக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்திருந்தனர்.

இங்குள்ள மொத்தம் 53 மரபுடைமைத் தலங்கள், அடையாளச் சின்னங்கள் குறித்து கருத்தாய்வில் பங்குபெற்றோரிடம் கேட்கப்பட்டது.

அவற்றைப் பற்றிய அவர்களின் நினைவுகள், விழிப்புணர்வு, தகவல், தோற்றம், முக்கியத்துவம் ஆகிய அம்சங்களையொட்டி வினாக்கள் அமைந்தன.

மரபுடைமை தொடர்பிலும் அது பராமரிக்கப்படுவது குறித்தும் வழக்கமாக நிபுணர்களிடையே கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

இம்முறை சராசரி சிங்கப்பூரர்களின் கருத்துகளைக் கண்டறிய முற்பட்டது கழகம். 

18 வயதுக்கு மேற்பட்ட 1,515 சிங்கப்பூரர்கள் ஆய்வில் கலந்துகொண்டனர்.

கூடுதல் விவரங்களோடு வருகிறது இன்றைய 8.30 மணித் தொலைக்காட்சிச் செய்தி. நினைவோடு பாருங்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்