Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்கு அரசியலில் ஆர்வமில்லை - IPS ஆய்வு

சிங்கப்பூரர்களில் பாதிக்கும் அதிகமானோருக்கு அரசியலில் ஆர்வமில்லை எனக் கொள்கை ஆய்வுக் கழகம் (Institute of Policy Studies (IPS) நடத்திய ஆய்வு காட்டியுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரர்களில் பாதிக்கும் அதிகமானோருக்கு அரசியலில் ஆர்வமில்லை எனக் கொள்கை ஆய்வுக் கழகம் (Institute of Policy Studies (IPS) நடத்திய ஆய்வு காட்டியுள்ளது.

இருப்பினும், இங்கு வசிக்கும் வெளிநாட்டினர் குறித்த அக்கறை உட்பட, சில கொள்கைகளில் சிங்கப்பூரர்களுக்கு உறுதியான கருத்து உண்டு என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

அவர்களைப் பாதிக்கக்கூடிய கண்காணிப்பு, குடிநுழைவு ஆகிய கொள்கைகளைப் பற்றி உறுதியான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள சிங்கப்பூரர்கள் தயங்காதவர்கள் என்றும் ஆய்வு சுட்டியது.

அதே வேளையில், சிங்கப்பூரர்களுக்குத் தேர்தலில் அதிகளவிலான நம்பிக்கை உண்டு என்றும், அவர்களுக்கு நாட்டின் அரசியல் அமைப்புமுறையில் திருப்தி இருக்கிறதென்றும் ஆய்வின் முடிவுகள் குறிப்பிட்டன.

World Values என்னும் ஆய்வில் பங்கெடுத்த சுமார் 80 நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அதில் மொத்தம் 2,012 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கலந்துகொண்டனர். அனைவரும் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்