Images
  • gavel
    ( படம்: AFP )

ஐ. எஸ் அமைப்பின் பிரசுரத்திற்குப் பணம் கொடுத்து ஆதரவளித்ததாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

ஐ. எஸ் அமைப்பின் பயங்கரவாதப் பிரசாரங்கள் கொண்ட பிரசுரத்தை வெளியிடுவதற்குப் பணம் வழங்கியதாக ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

35 வயது சிங்கப்பூரரான இம்ரான் காசிம் (Imran Kassim) வெளிநாட்டில் ஆயுத வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

அவர் 2014ஆம் ஆண்டில் ஐ. எஸ் பிரசுரம் ஒன்றை வெளியிட துருக்கியில் ஒருவரிடம் 450 வெள்ளி கொடுத்ததை வர்த்தகக் குற்றவியல் பிரிவு கண்டுபிடித்தது.

பயங்கரவாத நோக்கங்களுக்குப் பணம் கொடுத்து ஆதரிக்கும் செயல்கள் கடுமையான குற்றமாகக் கருதப்படும் என்று உள்துறை அமைச்சு கூறியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், தடுப்புக்காவல் ரத்து செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மற்றவர்களிடம் தீவிரவாதச் சிந்தனைகளைப் பரப்பாமல் தடுக்க, இம்ரான் காசிம் தனிமைப்படுத்தப்படுவார் என்றும், சிறையில் அவருக்கு மறுவாழ்வு ஆலோசனை வழங்கப்படும் என்றும் அமைச்சு கூறியது.  

Top