Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இஸ்தானாவில் ஆகஸ்ட் முதல் தேதி இடம்பெறவிருந்த பொது உபசரிப்பு பின்னொரு தேதிக்கு ஒத்திவைப்பு

இஸ்தானாவில் ஆகஸ்ட் முதல் தேதி இடம்பெறவிருந்த பொது உபசரிப்பு பின்னொரு தேதிக்கு ஒத்திவைப்பு

வாசிப்புநேரம் -
இஸ்தானாவில் ஆகஸ்ட் முதல் தேதி இடம்பெறவிருந்த பொது உபசரிப்பு பின்னொரு தேதிக்கு ஒத்திவைப்பு

(படம்: The Istana's website)

இஸ்தானாவில் ஆகஸ்ட் முதல் தேதி இடம்பெறவிருந்த பொது உபசரிப்பு,இரண்டாம் கட்ட உயர் விழிப்புநிலை காரணமாகப் பின்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இஸ்தானா, தேசிய தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும் என்று ஜூலை 13ஆம் தேதி அதிபர் அலுவலகம் தகவல் வெளியிட்டிருந்தது.

ஆனால் இப்போது சமூக அளவில் நோய்ப்பரவல் அதிகரித்துள்ளதாலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட காரணத்தாலும் பொது உபசரிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருந்துவதாகவும் அதிபர் அலுவலகம் தெரிவித்தது.

இஸ்தானா வழக்கமாக ஆண்டிற்கு 5 நாள்கள் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.

ஆனால் COVID-19 நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு
பிப்ரவரி மாதம் முதல் அது பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது.

சென்ற மே மாதம் 13ஆம் தேதி, மே தினத்தையும் நோன்புப் பெருநாளையும் முன்னிட்டு அது பொதுமக்களுக்குத் திறக்கப்படவிருந்தது.

ஆனால் அப்போது இரண்டாம் கட்ட உயர் விழிப்புநிலையால், அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்