Images
  • istana (1)

இரவு நேரத்தில் இஸ்தானாவில் ஒளிப்படைப்புகள்

சிங்கப்பூரின் பழமைவாய்ந்த மரபுடைமைத் தலங்களில் ஒன்றான இஸ்தானா, முதல் முறையாக இரவு நேரத்தில் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படவுள்ளது.

இஸ்தானா திறக்கப்பட்ட 150-ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்ச்சிக்கு அடுத்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதையொட்டி அங்கு அழகிய ஒளிப் படைப்புகள் இடம்பெறவிருக்கின்றன.

மேலும் இசை நிகழ்ச்சிகள், பாடல்கள், ஒளிக் காட்சிகள் எனப் பல்வேறு அம்சங்களும் இடம்பெறவுள்ளன.

வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கு விடப்படும்.

istana150event.sg எனும் இணையப்பக்கம் வழி நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம்.

விற்பனையின் மூலம் திரட்டப்படும் தொகை அதிபர் சவால் அறநிதிக்கு வழங்கப்படும். 

Top