Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் அடைந்திருக்கும் பல்லின நாடு என்ற மேம்பட்ட நிலை தொடர வேண்டும்: அமைச்சர் ஈஸ்வரன்

சிங்கப்பூர் அடைந்திருக்கும் பல்லின நாடு என்ற மேம்பட்ட நிலையை நாம் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் அடைந்திருக்கும் பல்லின நாடு என்ற மேம்பட்ட நிலையை நாம் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

அதைக் கட்டிக்காக்கும் பணி முழுமையடைந்து விட்டதாகவும் எண்ணக்கூடாது.

மாறாக முக்கியமான இந்தப் பணி தொடர வேண்டும் என இன அடையாளம், கலாசாரம் ஆகியவை குறித்த ஒரு கருத்தரங்கில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு ஓர் இந்தியக் குடும்பம் குழம்பு சமைத்ததன் தொடர்பில் சீன அண்டைவீட்டுக் குடும்பம் ஒன்று புகார் அளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து குழம்பு சமைப்பதைக் குறைத்துக்கொள்ளுமாறு அந்த இந்தியக் குடும்பம் கேட்டுக்கொள்ளப்பட்டதை அமைச்சர் சுட்டினார்.

சினத்தைத் தூண்டக்கூடிய அத்தகைய செய்திகள் சமூக ஊடகங்களில் எவ்வாறு வேகமாகப் பரவுகின்றன என்பதை அவர் விளக்கினார்.

இன அடையாளம், கலாசாரம் ஆகியவை குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அவற்றுள் ஒன்று சேனல் நியூஸ்ஏஷியாவும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து நடத்திய ஓர் ஆய்வு.

சுமார் 2,020 பேர் அதில் பங்கேற்றனர்.

சிங்கப்பூரின் பல்வேறு இனங்கள் அந்தந்தக் கலாசாரத்தின்மீது கொண்டுள்ள ஈடுபாட்டை அலசியது ஆய்வு.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்