Images
  • lib

கற்றலுக்கும் பகிர்ந்துகொள்வதற்கும் ஏற்ற இடமாக நூலகங்கள் உருமாறியிருக்கின்றன : அமைச்சர் எஸ். ஈஸ்வரன்

நூல்களின் தொகுப்பாக மட்டும் நூலகங்கள் திகழ்வதில்லை...

கற்றலுக்கும் பகிர்ந்துகொள்வதற்குமான இடங்களாகவும் அவை உருமாறியிருப்பதாகத் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.

விவோசிட்டி கடைத்தொகுதியில் இன்று புதிய நூலகத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்து அவர் பேசினார்.

ஏட்டு நூல்களைத் தவிர்த்து, இந்தப் புதிய நூலகத்தில் ஒலிப் புத்தகங்கள், மின்-நாளிதழ்கள் எனச் சுமார் 490 ஆயிரம் மின் வளங்களும் இடம்பெறவிருக்கின்றன.

மின்னிலக்கப் பொருளியல், புதிய தொழில்நுட்பம் எனப் பல்வேறு தலைப்புகளைத் தொட்டு ஓராண்டில் 500க்கும் அதிகமான நிகழ்ச்சிகளையும் நூலகம் ஏற்றுநடத்தவிருக்கிறது.

நூலகங்கள் வாசகர்களைச் சென்றடைய மின்னிலக்க முறைகளை அதிகமாகப் பயன்படுத்துவதையும் அமைச்சர் ஈஸ்வரன் சுட்டினார்.

நூலகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று முக்கிய மாற்றங்கள் பற்றி அவர் விவரித்தார்.

Top