Images
  • IBM
    (படம்: REUTERS/Brendan McDermid/File Photo)

சிங்கப்பூரின் தொழில்நுட்பத் துறையில் 300 வேலைகளை உருவாக்கவுள்ள IBM தொழில்நுட்ப நிறுவனம்

தொழில்நுட்பத்துறையில் அதிகமான சிங்கப்பூரர்கள் பணிபுரியவேண்டும் என்று சிங்கப்பூர் விருப்பம் கொண்டுள்ளது.

வளர்ந்துவரும் அந்தத் துறையின் தேவையைப் பூர்த்தி செய்ய, அனைத்துலகத் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான IBM-உடன் இணைந்து அது பணியாற்றவிருக்கிறது.

அதன் வழி 300 பேர் அதற்கான பயிற்சியையும் வேலையையும் பெறுவர்.

இன்று கையெழுத்திடப்பட்ட நோக்கக் குறிப்பின்வழி, அதிகமான சிங்கப்பூரர்கள் மின்னிலக்க ஆலோசகர், தரவு விஞ்ஞானிகள் போன்ற வேலை வாய்ப்புகளைப் பெறுவர்.

TeSa எனும் திட்டத்தின்கீழ், அந்த வேலைகளுக்கான திறன்களை அவர்கள் பெறுவர்.

40 வயதுக்கு மேற்பட்டோரும் புதிய பட்டதாரிகளும் திட்டத்தில் பங்கேற்கலாம்.

IBM நிறுவனம் புதிய வேலைக்குத் தேவையான பயிலரங்குகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும்.

இது போன்ற பங்காளித்துவம் தொழில்நுட்பத்துறைக்கு மாறவிரும்புவோருக்கு உதவும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் S ஈஸ்வரன் கூறினார்.

Top