Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உற்பத்தித் துறை ஊழியர்களுக்கான புதிய பயிற்சி நிலையம்

உற்பத்தித் துறை ஊழியர்களுக்கான திறன் வளர்ச்சித் திட்டங்களை வழங்கும் புதிய பயிற்சி நிலையம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -
உற்பத்தித் துறை ஊழியர்களுக்கான புதிய பயிற்சி நிலையம்

(படம்: Brandon Tanoto)


உற்பத்தித் துறை ஊழியர்களுக்கான திறன் வளர்ச்சித் திட்டங்களை வழங்கும் புதிய பயிற்சி நிலையம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படவுள்ளது.

SkillsFuture சிங்கப்பூர், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, JTC ஆகிய அமைப்புகள் Bosch Rexroth நிறுவனத்துடன் இணைந்து அதை அமைக்கவுள்ளன.

Bosch Rexroth நிறுவனத்தின் தொழில் கட்டமைப்பையும், நிபுணத்துவத்தையும் சிறிய நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிப்பது நோக்கம்.

அதி நவீன தொழில்நுட்ப அம்சங்களுக்கான பயிற்சித் திட்டத்தை சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து வரைவதிலும் நிலையம் கவனம் செலுத்தும்.

சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகளை உருவாக்குவதற்கு சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, துமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவை உதவும்.

அந்தப் பயிற்சிகளில் பொறியியல் பட்டயக் கல்வி அல்லது பட்டப்படிப்பு முடித்த சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் கலந்துகொள்ளலாம்.

8 வாரம் நீடிக்கும் அந்தப் பயிற்சிகள் வேலையிடச் சூழலை பிரதிபலிக்கும் வகையில் அமையும்.

பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவோருக்கு சிங்கப்பூர்-ஜெர்மானிய வர்த்தகத்-தொழிற்சபை சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கும்.

அது குறித்த இணக்கக் குறிப்பு நாளை மறுநாள் கையெழுத்தாகும்.

திட்டத்தில் 11 நிறுவனங்கள் பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளன.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்