Images
  • sinda leadership programme
    (படம்: ஷரளா தேவி)

இளையர்களில் உள்ள தலைமைத்துவப் பண்புகளையும் ஆற்றல்களையும் கண்டறிய உதவும் திட்டங்கள்

தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள், தங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவப் பண்புகளையும் ஆற்றல்களையும் கண்டறிய வேண்டும்.

அதற்கு வாய்ப்பளிக்கிறது சிண்டாவின் ITE ASPIRE, ITE Leadership திட்டங்கள்.

அவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இரண்டாம் கல்வி அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

அங் மோ கியோவில் அமைந்துள்ள ITE Central வளாகத்தில் இன்று மாணவர்களிடையே பேசினார் குமாரி இந்திராணி ராஜா.

ஆற்றல் இருந்தாலும் சில மாணவர்கள் பொதுவெளியில் பேசத் தயங்குகின்றனர். அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு முன்வரவேண்டும் என்றார் குமாரி இந்திராணி ராஜா.

தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்காகவே சிண்டா இரு திட்டங்களைச் சில ஆண்டுகளுக்கு முன் வடிமைத்தது. 

Top