Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

46,700 வெள்ளியைக் கையாடிய தலைமையாசிரியருக்குச் சிறை

குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் தலைமையாசிரியராய்ப் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் சுமார் 46,700 வெள்ளியைக் கையாடியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் தலைமையாசிரியராய்ப் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் சுமார் 46,700 வெள்ளியைக் கையாடியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

30 வயது செரில் ஸனேட்டா, Acekidz@SG என்ற குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்துவந்தார்.

பெற்றோரிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களை நிலையத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் செரில் தமது சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அவர் நிறுவனத்தின் பணத்தைக் கையாடியுள்ளார்.

ரொக்கம் குறைவதை அறிந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விசாரணையைத் தொடங்கினார். அதில் செரில் செய்த கையாடல் வெளிச்சத்திற்கு வந்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட செரில் மீது காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஊழியராக இருந்து நம்பிக்கை மோசடி செய்பவருக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்