Images
  • crime file picture
    கோப்புப் படம்: AFP 

வீட்டுப்பாடத்தைச் செய்யாத மகனை அடித்த தந்தைக்குச் சிறை

வீட்டுப்பாடத்தைச் செய்யாத 9வயது மகனை அடித்த 35 வயது தந்தைக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகனை மோசமாக நடத்திய குற்றத்தை அவர் ஜூன் மாதம் ஒப்புக்கொண்டார்.

மகனைத் தாக்கிய சம்பவம் சாப்பாட்டு அறையில் இருக்கும் கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.

பிள்ளை அழும் சத்தம் கேட்ட அண்டை வீட்டினர் ஒருவர்  காவல்துறையினரைத் தொடர்புக் கொண்டார். அது குழந்தை வதை சம்பவமாக இருக்கக்கூடும் என்று அவர் நினைத்தார்.

வீட்டிற்குத் திரும்பிய தாயாரிடம் நடந்ததை மகன் கூறினார். தாயார் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காணொளியை மீட்டெடுத்தார்.

சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனின் உடலில் பல காயங்களை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்தது.

தம்பதி விவாகரத்து பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Top